Tuesday, December 23, 2014

மஹிந்த சிந்தனை VERSION 3.0 வெளியானது

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனம் சற்று நேரத்திற்கு முன்னர் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்டுள்ளது.

´மஹிந்த சிந்தனை – உலகை வெல்லும் வழி´ என்ற பெயரில் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.

இழுபறி நிலையில் காணப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று காலை வெளியிடப்பட்டது.

இந்த விஞ்ஞாபனம் இன்று முற்பகல் 9 .30 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினால் வெளியிடப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்புக்கள் இன்று ஆரம்பமாகும் நிலையில் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.

அரசாங்க கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை முழுமையாக தெரிந்து கொள்ளாமலேயே அஞ்சல் மூல வாக்காளர்கள் தமது வாக்குகளை அளிக்கவுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுமிருந்தது.

ஏற்கனவே இந்த விஞ்ஞாபனம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 26ம் திகதியே வெளியிடப்படும் என்று அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்திருந்தார்.

அதேவேளை, இந்த வெளியீட்டு வைபவத்தில் அரசாங்கத்தில் இதுவரையிலும் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

எனினும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் எவரையும் இந்த வைபவத்தில் காணக்கிடைக்கவில்லை.
Disqus Comments