Wednesday, January 14, 2015

2015உலகக் கிண்ணத்தின் பின் ஒருநாள் போட்டிகளிலிருந்து மிஸ்பா உல் ஹக் ஓய்வு

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியுடன்  ஒருநாள் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப் போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் மிஸ்பா  உல்ஹக் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் தொடங்கவிருக்கும்  உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு பிறகு சர்வதேச ஒருநாள் போட்டி மற்றும் இருபதுக்கு 20 போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
அதன் பிறகு டெஸ்டில் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
40 வயதான மிஸ்பா கடந்த 2002 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இதுவரை 153 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4669 ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Disqus Comments