பாகிஸ்தானின், கராச்சியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 50 இற்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பஸ் வண்டியொன்றும் எண்ணெய்த்தாங்கி வாகனமொன்றுமே மோதி விபத்துக்குள்ளானது. இந்த எண்ணைய்த்தாங்கி வாகனமானது வேகமாகவும் தவறான பக்கத்திலும்; பயணித்துள்ளதுடன், மேற்படி பஸ் வண்டியையும் மோதியுள்ளது. இதன்போது,
இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிவடைந்துள்ளன. இந்த பஸ் வண்டியின் கூரையின் மீதிருந்து பயணித்தவர்களில் சிலர் பாதுகாப்பாக பாய்ந்து தப்பிக்கொள்ள முடிந்தது. இருப்பினும், பலர் பஸ் வண்டியினுள் சிக்கியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த பஸ் வண்டியில் 60 இற்கும் அதிகமானோர் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
