பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை மீண்டும் பிரதம நீதியரசராக நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.
தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டார நாயக்கவை மீண்டும் பிரதம நீதியரசராக நியமிப்பேன் என மைத்திரிபாலவின் 100 நாள் வேலைத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் எதிரணியின் கட்சித் தலைவர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
