வடமேல் மாகாண சபையின் முதலமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளார்.
சட்டத்தரணியான இவா்கள் கடந்த பாராளுமன்றத் தோ்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் வேட்பாளராக களமிறங்கி பாராளுமன்றம் சென்றார். பின்னா் கடந்த வடமேல் மாகாண சபைத் தோ்தலில் கட்சி மாறி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு அதிகளவு வாக்குகளைப் பெற்று வடமேல் மாகாண சபையின் முதலமைச்சராக பதவியேற்றார்.
ஆனால் இப்போது கட்சித் தாவல்கள் தாறுமாறாக இடம்பெறும் நிலையில் அவரும் கட்சி தாவ முன்வந்திருக்கின்றார். கட்சி தாவுபவா்கள் தாவிக் கொண்ட தான் இருப்பார்கன் என்பதற்கு தயாரிசி ஒரு முன் உதாரணமாக திகழ்கின்றார்.


