பொதுபலசனா ஞானசாரதேரர், ராவணபலய இந்துனாந்த தேரோ, கலாநிதி குணதாச அமரசேகர, டொக்டர் வந்தபண்டார, பேராசிரியர் இதுரசார தம்ம தேரோ, மற்றும் பௌத்த இயக்கங்கள் ஒன்றினைந்து எதிர்கட்சி வேட்பாளர் மைத்திரக்கு எதிராக நேற்றைய தினம் ஊடக சந்திப்பொன்றை நடாத்தியிருந்தனர்.
அங்கு, பிரபகரனின் மகளின் பிறந்த தினத்திற்கு பூச் சொண்டு அனுப்பியவரும் இந்த மைத்திரியின் கூட்டமைப்பில் உள்ளதாகவும், இந்த நாட்டை மீள இரண்டாகப் பிரிப்பதற்காகவே ஹக்கீம், சம்பந்தண் ரணில் சந்திரிகா இணைந்துள்ளனர் எனவும் இவர்களது இரகசியத்தை உடனடியாக மைத்திரிபால சிறிசேனா பௌத்த மக்களுக்கு வெளியிட வேண்டும் எனவும் மைத்திரி உடன் கைது செய்யப்படல் வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.
இதனடிப்படையில் இந்த நாட்டுக்கு சமாதானத்தை ஏற்படுத்தி யுத்தத்தை வென்று தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சி தொடரவேண்டும் எனவும் அங்கு வேண்டப்பட்டது.
மேலும் மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கீழ் எமக்கு சுதந்திரம் கிடைத்தது. மைத்திரிபால சிறிசேனா இந்த நாட்டை மீளப் பிரிப்பதற்கு துணைபோகின்றார் எனவும் ஞானசார பிரத்யேகமாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது அவர்கள் பின்னால் சம்பந்தன் – ஹகீம் – மைத்ரி – ரணில் – சந்திரிக்கா நாட்டைப் பிரிக்கும் திட்டத்தை முறியடிப்போம் எனும் வாசகங்கள் அடங்கிய பதாதை காணப்படுவதை படத்தில்
காணலாம்.
-அஸ்ரப் ஏ சமத்