Saturday, February 28, 2015

கற்பிட்டியில் வைத்தியசாலைக் கட்டிடம் & தாய் சேய் சிகிச்சை நிலையம் திறப்பு

அமானி சாரா
கல்பிட்டி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட திகழி பிரதேசத்தின் தாய் சேய் சிகிச்சை நிலையம், கல்பிட்டி மாவட்ட வைத்தியசாலையின் புணரமைக்கப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு என்பன வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.
வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிர் அவர்களின் வேண்டு கோளுக்கிணங்க கல்பிட்டிக்கு விஜயம் செய்த வடமேல் மாகாண சுகாதார, விளையாட்டுதுறை அமைச்சர் டி.பி. ஹேரத் அவர்களினால் இக் கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டன.
திகழி தாய் சேய் சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்ட பின் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிரினால் குறித்த கட்டிடத்தில் கிழமைக்கு 2 நாட்கள் நிரந்தரமாக வைத்திய சிகிச்சை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.இதனை உடனடியாக ஏற்றுக்கொண்ட மாகாண அமைச்சர் முதற்கட்டமாக எதிர்வரும் செவ்வாய்கிழமை முதல் கிழமையில் ஒரு நாள் சிகிச்சை வழங்கப்டுமென உறுதியளித்தார்
கல்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு சென்ற அமைச்சர் வைத்தியர்கள், தாதிமார்கள், மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடியதுடன், நோயாளர்களிடமும் நலம் விசாரித்தார்.இந் நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் சிந்தக மாயாதுக்க, கல்பிட்டி பிரதேச சபைத்தலைவர் எம்.எச். மின்ஹாஜ், அமைச்சின் மாகாண செயலாளர், உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
நன்றி - புத்தளம் ஆன்லைன்.
 




 
 
Disqus Comments