Saturday, February 28, 2015

கட்டுப்பாட்டு விலைக்கமைய பொருட்களை விற்பனை செய்யாதவா்களுக்கு எதிராக நடவடிக்கை

வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட  கட்டுப்பாட்டு விலைக்கு அமைய    பொருட்களை விற்பனை செய்யத் தவறிய  400 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பினை அடுத்து குறித்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஜே.எம்.ஏ.டக்ளஸ்  தெரிவிக்கின்றார்.
வரவு செலவு திட்டத்தினூடாக அறிவிக்கப்பட்டுள்ள விலைக்குறைப்பிற்கமைய பொருட்களை விற்பனை செய்யாத வர்த்தகர்கள் தொடர்பில் 1977 என்ற இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Disqus Comments