Saturday, February 28, 2015

என் மீதான குற்றச்சாட்டுக்கள் அடிப்படை அற்றவை - கோடாபய

அவுஸ்தி­ரே­லி­யாவில் இருந்து நேற்று முன்­தினம் நாடு திரும்­பிய முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பிர­சாந்த ஜெயக்­கொடி முன்­வைத்­துள்ள தம்­மீ­தான குற்­றச்­சாட்டு அடிப்­ப­டை­யற்­றது என்று முன்­னாள பாது­காப்புச் செய­லா­ள­ரான கோத்­த­பாய ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார்.
 
வெள்­ளைவான் கடத்­தல்­களின் பின்­னணி குறித்த தக­வல்கள் தம்­மிடம் உள்­ள­தா­கவும், அவை தொடர்பில் விசா­ரணை ஒன்று நடத்­தப்­பட்டால், அதில் தொடர்­பு­டை­ய­வர்­களின் பெயர்­களை வெளி­யிடத் தயா­ராக இருப்­ப­தா­கவும், முன்னாள் பொலிஸ் பேச்­சாளர் பிர­சாந்த ஜெயக்­கொடி கூறி­யி­ருந்தார்.
 
பல ஆண்­டு­க­ளுக்கு முன்­னரே பொலிஸ் திணைக்­க­ளத்தில் இருந்து வெளி­யேறி விட்ட அவர், ஒரு­வேளை மீண்டும் அதில் இணைய விரும்­பலாம். எவ்­வா­றா­யினும், இது தற்­போது நடந்து வரும் எமது பெயரைக் கெடுக்கும் பரப்­பு­ரையின் ஒரு பகு­தி­யாகும் என்றும் கோத்­த­பாய ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார். (நன்றி - வீரகேசரி)
Disqus Comments