ஏற்கனவே இங்கே சில முற்போக்கு பின் நவீனத்துவ வியாதிகள்... ஆணாதிக்கத்தையும் பெண்ணடிமைத்தனத்தையும் பெண்ணுரிமை என்று பினாத்திக்கொண்டு இருக்கின்றன.
அப்போது யாரும் குழம்பிக்கொண்டு அலைய வேண்டாம். இது ஆணாதிக்கத்தால் திட்டம் போட்டு மூளைச்சலவை செய்து உருவாக்கப்பட்ட பெண்ணடித்தனமே..! நோ டவுட் அட் ஆல்..!
இவர்களிடம் ஏமாந்து விடாதீர்கள் போலிப்பெண்ணியம் பேசும் மடமைப்பெண்களே..!
செய்தி :
ஒரு சீன ரெஸ்டாரண்டில்...
முழங்காலுக்கு மேலே 3 இன்ச் தூக்கி ஸ்கர்ட் அணிந்து வந்தால்...
20% பில்லில் டிஸ்கவுன்ட்டாம்..!
இது...
அதன்பிறகு ஒவ்வொரு இஞ்சுக்கும் 5% முதல் 10% தள்ளுபடி அதிகரித்துக்கொண்டே போய்...
அதிகபட்சமாக... 13 இன்ச் ஸ்கர்ட்டை மேலே தூக்கி அணிந்து வந்தால்... சாப்பிட்ட பில்லில் ஒரேயடியாய் 90% தள்ளுபடியாம்..!
அதற்கென்றே.....
ஹோட்டல் வாசலில் ஒருத்தன் ஸ்கேலுடன் பாவாடையை முட்டிக்கு மேலே அளந்து கொண்டு...! ச்சே... என்ன கண்றாவி உலகமடா இது..!
இறைவா...
பெண்ணிய வேஷம் போட்டுத்திரியும் இதுபோன்ற ஆணாதிக்க தந்திரக்கார ஷைத்தான்களை விட்டும் பெண்களையும் அவர்களின் சிந்தனைகளையும் காப்பாற்றுவாயாக..!
மூலம்
மூலம்
