Sunday, May 24, 2015

இலங்கையில் இவ்வருட முதற்காலாண்டில் 3240 பேருக்கு எயிட்ஸ் நோய்...!

(நேசமணி - மடவளைநியூஸ்) இவ்வருடம் முதற்காலாண்டு வரையிலான காலப் பகுதியில் இலங்கையில் 3240  போ் எயிட்ஸ் நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக கணிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய  நாடுகளின் இலங்கைக்கான எயிட்ஸ் வேலைத்திட்டத்துக்கான பிரதிநிதி  வைத்தியா் தயாநாத் ரணதுங்க தெரிவித்துள்ளார். 

இவ்வாறு எயிட்ஸ் தொற்றுக்குள்ளானவா்களில் 1732 போ் மாத்திரமே இணப்பாணப்பட்டுள்ளதாகவும் ஏனைய 1508 பேரும் நாட்டிற்குள் இருந்த போதும் இதுவரையிலும் இணங்காணப்படவில்லை எனவும்  அவா் மேலுா் குறிப்பிட்டுள்ளார்.

 ஐக்கிய நாடுகளின் எயிட்ஸ் வேலைத்திட்டத்தின் நோக்கமானது 2030ம் ஆண்டளவில் இலங்கையில் எயிட்ஸ்ஸினை முற்றாக இல்லாதொழிப்பதாகும். அதே போன்று இலங்கையில் எயிட்ஸ் பரவுதல் மற்றும் எயிட்ஸினால் ஏற்படும் மரணம் போன்றவற்றை முற்றாக இல்லா தொழிக்கும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளார். 
Disqus Comments