மத்திய சீனாவிலுள்ள முதியோர் இல்லமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 38 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகியதுடன் 6 பேர் படுகாயமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 'திங்கட்கிழமை மாலை, மத்திய சீனாவின் பிங்டிங்ஷான் பகுதியில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான முதியோர் இல்லம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தகவல் தெரியவில்லை. இந்த விபத்தில் 38 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். 6 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 2 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தீ விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன' என இச்சம்பவம் குறித்து சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
