ஜப்பானின் ஒகசவாரா தீவில் 7.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலநடுக்கம் 678 கிலோ மீற்றர் ஆளத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்த சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. அத்துடன், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லையெனவும் அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒகசவாரா தீவானது டோக்கியோவிலிருந்து 1,000 கிலோமீற்றர் தொலைவிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.