Sunday, May 31, 2015

90 நிமிடத்திற்கு ஒரு பெண் இலங்கையில் கற்பழிக்கப்படுகின்றாள்

(இப்னு ஜமால்தீன் - Madawalanews.com) இன்றைய நவீன உலகின் தேவைகள் பெண்களை வீதியில் வீசியுள்ளது. கற்றல், கற்பித்தல், வேலைவாய்பு மற்றும் கேலிக்கூத்துகள் என அத்தேவைகள் பரந்து செல்கின்றன.

பேரூந்துகளிலும், பொது இடங்களிலும் பெண்கள் அங்கச் சேட்டைக்கு உள்ளாகின்றனர்.மேலும் வேலைத் தளங்களில்உயர் அதிராரிகள், சக ஊழியர்களின் பாலியல் பசிக்கு இரையாகின்றனர்.

வீதிகள், காடுகள் மற்றும் பாலடைந்த வீடுகளில் சல்லடையாக்கப்பட்ட நிலையில்குற்றுயிராகவும், சடலமாகவும் பெண்கள்கண்டெடுக்கப் படுவதற்கு இந்தநவீன நாகரீகம் வித்திட்டுச் செல்வதை காணலாம்.

பெண்ணின் அரண் எனபோற்றப்படும் அவளின் தந்தை, சகோதரன் மற்றும் குடும்பத்தினர்களும் தனது பாலியல் பசிக்கு பச்சிளம்  பெண்களை பயன்படுத்துகின்றனர்.  தல்லாடும் வயதில் ஊசலாடும் முதியவர்களை கூட இந்த நவீன கலாசாரம் விட்டு வைக்க வில்லை, அவர்களையும் பாலியல் பைத்திய காரர்களாக மாற்றியுள்ளது.

பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைக்களுக்கு பந்நாட்டுச் சினிமா, தொடர் டீவீ நாடகங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றது. சினிமா பாணியில் இளைஞர்கள் குழு, குடும்ப உறவுகள் மற்றும் தனி நபர்களால்பெண்ணினம் சீரழிக்கப்படுவது இதற்கு சான்றாகும்.

இலங்கையில் 1990ல் 542 பெண்களும்,1995ல் 1379பெண்களும், 2007ல் 1592பெண்களும், 2008ல் 1624பெண்களும், 2009ல் 1854பெண்களும், 2010ல் 1636பெண்களும் கற்பழிக்கப்பட்டுள்ளதுடன், 2011ம் ஆண்டில் 1400க்கும் மேற்பட்ட சிறுமிகள் மீது கற்பழிப்பு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் போச்சாளர் அஜித் ரோகண அவர்களின் அறிக்கை தெரிவிக்கின்றது.

அதேவேளை 90 நிமிடத்திற்கு ஒரு பெண் என்ற அடிப்படையில் நாள் ஒன்றிற்கு 5 பெண்கள் இலங்கையில் கற்பழிக்கப்படுவதாக சோசலிச பெண்கள் அமைப்பின் தேசிய அமைப்பாளர் சமன்மலி குணசிங்க தெரிவித்துள்ளார். அதில் 89%ம்13-16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள்பாதிக்கப்படுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பெண்ணினத்தின் மீது வன்புணர்வை மேற்கொள்ளும் காமுகர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது கிடையாது. அதே நேரம் பாலியல் குற்றவாளிகளுக்கு சர்வதேச அளவில் சட்டத்தால் வழங்கப்படும்தண்டனை கடினத்தன்மை அற்றதாக இருக்கின்றது.

08,09 மற்றும் 12 வயது இந்தியச் சிறுமிகளை கற்பழித்த  77 வயது முதியவருக்கு தலா பத்து வருடம் 30ஆண்டு சிறைத் தண்டனையும், 30000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு அந்நாட்டின் தண்டனைச் சட்டம் 360ன் கீழ் தீர்பளிக்கப்பட்டது.

இலைங்கையில் பாலியல் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை இத்தீர்ப்பை ஒத்ததாகவே இருக்கின்றது. மறுபுறத்தில் பாலியல் கொலையாளிகளுக்கு நீதிமன்றங்கள்மரண தண்டனை வழங்கிய போதும், அத்தண்டனை நிறைவேற்றப்படுவதில்லை. இதனால் மரண தண்டனைக் கைதிகள்ஆயுள் தண்டனையை அனுபவிக்கின்ற சூழல் உருவாகியுள்ளது.

பத்திரிகை தகவல்களின் படிதினந்தோறும் கற்பழிப்புச் சம்பவங்கள் நடைபெறுகின்ற போதும் தேசிய அளவில் அவற்றிக்கு எதிர் விளைவுகள் தோன்றுவதில்லை. ஆனால் அண்மையில் புங்குடு தீவு மாணவி வித்தியா மீதான பாலியல் கொலைதேசிய பேசுபொருளாக காணப்படுவதுடன், நாட்டில்
விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளது.

இப் பாலியல் கொலையை கண்டித்துமத,மொழி பேதங்களை மறந்து தேசிய ரீதியில் பாடசாலைகள்,பல்கலைக்கழகங்கள்,ஆசிரியர் மற்றும்அபிவிருத்திச் சங்கங்கள்,மகளிர் அமைப்புகள், மற்றும் சிவில் சமூக அமைப்புகளால் என்பவற்றினால் எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏன்!மக்கள் பிரதி நிதிகளான….பிரதி அமைச்சர் விஜகலா மகேஸ்வரன், ரோசி சேனாரத்தன, விஜயதாச ராஜபக்ச, சுமந்திரன் உட்பட பலர் வித்தியாவின் கொலையை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்பாட்டக்காரர்கள் அனைவரும் முன்வைத்த கோரிக்கை; வித்தியாவை கொலை செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அதிக பட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதாகும்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கண்டனப் பேரணியில் கலந்து கொண்ட பிரதி அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் அவர்கள்“கொலையாளிகளுக்கு மக்கள் முன் தூக்குத்தண்டனை கொடுக்க வேண்டும்” என கூறி இருந்தார்.இக்கூற்றை வலியுறுத்தும் வகையில் மட்டு.மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ். சாமசங்கரண் அவர்கள்“குற்றவாளிகளுக்கு அரபு நாடுகளில் வழங்கப்படும் தண்டனையை வழங்க வேண்டும்” எனக்கூறியுள்ளார். இவ்வாறு ஷரீயா சட்டத்தை வலியுறுத்தும் வகையில் பல பிரமுகர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்திருந்தனர்.

வித்யாவைப் போன்றே இந்தியபிசியோதிரபி மருத்துவ மாணவி 2013.12.16ம் திகதி தலைநகர் டெல்லியில்காமுகர்களால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.

வித்யாவின் கொலையை கண்டித்து வீசும் சூறாவளி அன்று முழு இந்தியாவிலும் வீசியது.அது மாத்திரமன்றி கொலையாளிகளுக்கு ஷரீயா தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. 

மருத்துவ மாணவியின் கொலைக்கான தண்டனை எவ்வாறு அமை வேண்டும் ? என விஜய் டீவியின் “*நீயா**?**நானா**?*”விவாத நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது.அதில் பங்குபற்றிய இருதரப்பினரும்“பாலியல் குற்றவாளிகளுக்கு ஷரீயா தண்டனை வழங்க வேண்டும். அதன் ஊடாகத்தான் பாலியல் குற்றத்தை குறைக்க முடியம் என கூறினர்” அத்துடன் அத்தண்டனைய நாட்டில் சட்டமாக்குமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.

அண்மையில் சவுதி நாட்டின் விளம்பரம் ஒன்றினை காழ்ப்புணர்ச்சி ஊடகங்கள் இவ்வாறு சித்தரித்தது“இரக்கமின்றி காட்டுமிரான்டித்தனமாக மனிதர்களில் தலையை வெட்டுவதற்கு  சவுதியில் ஆட்கள் தேவை”. ஷரீயா சட்டம்இவ்வாறுவிமர்சிக்கப்படுகின்ற போதும் அதைவலியுறுத்த காரணம் என்ன? அப்படி என்ன இரகசியம் உள்ளது அதில்?.

ஏக இறைவனால் வழங்கப்பட்ட தீர்ப்புகள் ஷரீயாச் சட்டங்களாகும். அச்சட்டங்கள் எங்கும், எப்போதும், எவருக்கும் வழங்குவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. அதனால்தான் அது வலியுறுத்தப்படுகின்றது. குற்றமிழைக்கப்பட்டவனின் வேதனையை குற்றவாளியும் அனுபவிக்கும் போது அக்குற்றம் சமூகத்தில் இருந்து அழிய ஆரம்பிக்கின்றது.

இதனால் தான் கண்னுக்கு கண், காதிக்கு காது, மூக்கிற்கு ,மூக்கு, பல்லிற்கு பல், கொலைக்கு கொலை என்று ஷரீயா குற்றவியல் சொல்கின்றது. வாதியால் அல்லது அவனது பெற்றோர்களால் பிரதிவாதிக்கு மண்னிப்பு வழங்கப்பட்டால் அல்லதுகோரப்பட்டும்இழப்பீட்டுத் தொகையை  வழங்குகின்ற போது வேதனையை அனுபவிப்பதில் இருந்து விடுபட முடியும் என்பது ஷரீயாச் சட்டத்தின் விதிமுறையாகும்.

ஷரீயாச் சட்டம் நடைமுறையில் உள்ள வலைகுடா  நாடுகளுடன்,அச்சட்டம் பின்பற்றப்படாத பாகிஸ்தான், பங்கலாதேஷ் போன்ற முஸ்லிம் நாடுகள் உட்பட ஏனை உலக நாடுகளை ஒப்பீட்டுப்பார்க்கும் போது வலைகுடா நாடுகளில் குற்றங்கள் இடம் பெருவதில்லை என்றுதான் கூற வேண்டும். இதற்கு ஷரீயா அடிப்படையில் அமைந்த நீதிமன்றங்களே காரணமாகும்.

வலைகுடா நாடுகளைப் போல் உலக நாடுகளிலும் ஷரீயா சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமானால் உலகில் அரங்கேரும் குற்றங்களை குறைக்கலாம்.  ஆனால் பல்லின மக்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் இது சாத்தியாமா?. “சிறப்பு நீதிமன்றத்தின் ஊடாக வித்தியாவின் கொலைக்கு தீர்ப்பு வழங்கப்படும்” என கடந்த 26ம் திகதி யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாவது, ஷரீயா சட்டத்தைஅமுல்படுத்துவது சாத்திமற்றது என்பதை தெளிவுபடுத்துகின்றது.

குற்றம் நடைபெறுவதற்கு குற்றவாளிகள் மாத்திரமன்று. அரசு உட்பட குற்றமிழைக்கப்பட்டவர், அவரின் குடும்பதவரும் காரணமாவர்.

“எனது உறவினர் பொண்னுதான், ஆனால் நான் குடிபோதையில் இருந்ததால் அது விலங்கவில்லை” வித்தியா சிதைக்கப்பட்டதற்கு இக்குடியே முதல் காரணம் எனலாம். பெருந்தொகைமாதுகளின் கற்புகள், உயிர்கள் பறிக்கப்படுவதற்கு பின்புலம் மதுவேயாகும். எனவேமது மீது தடை, பெண்களுக்கு பிரத்தியேக பஸ், மாணவிகளின் சீருடையில் மாற்றம்,காரியாலயங்களில் பெண்களுக்கு தனிப்பகுதி போன்ற சீர் திருத்தங்களை அரசு மேற்கொள்ளும் போது பெண்களுக்கு எதிரான வன்முறைகளை பாரியளவில் குறைக்க முடியும்.

அதே வேளை நவீன கலாசாரத்தின் அடிப்படையில் பிள்ளைகளை வளர்த்தல், ஆண்கள் மீது அதீத நம்பிக்கை கொள்ளுதல், பிள்ளைகளின் செயற்பாடுகளில் கவணம் செலுத்தாமை போன்ற பெற்றோர்கள் விடும் தவறுகள் பெண் பிள்ளைகளுக்கு எதிராக கொடுமைகள் இடம்பெருவதற்கு சாதகமாக அமைகின்றது. இவைகள் தவிர்க்கப்பட வேண்டும்.

ஷரீயா சட்டத்தை பல்லின மக்கள் வாழும் நம் நாட்டில் நடைமுறைப்படுத்துவதென்பது சாத்தியமற்ற விடயமாகும். பெண்கள் உட்பட எல்லோருக்கும் எதிராக மேற்கொள்ளப்படும் குற்றங்கள் எக்காரணத்தினால் நடைபெறுகின்றது என்பதை இனங்கண்டு, அவைகளை தவிர்ந்து கொள்கின்ற போது அக்குற்றச் செயல்கள் படிப்படியாக குறையும்.

இதற்கு அரசு, பெற்றோர்கள், பிள்ளைகள், ஆடவர்கள் அனைவரினதும் ஒத்துழைப்பு இன்றி அமையாததாகும்.
Disqus Comments