Thursday, May 28, 2015

இந்த நாட்டினர் மூன்று பிள்ளைகளுக்கு மேல் பெற்றெடுக்க முடியாது.- ஞானசார தேரர்

பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் நேற்று முன்தினம் நாடு திரும்பி இருந்த நிலையில் இன்று அவ்வமைப்பு கொழும்பில் விஷேட ஊடக மாநாடு ஒன்றை நடத்தியிருந்தது.

இதன் போது கருத்து வெளியிட்ட பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரர் பொதுபல சேனா ஜாதிக பெரமுன என்ற பெயரில் தங்கள் அமைப்பு அரசியல் பிரவேசம் செய்ய உள்ளது தொடர்பாக இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் எதிர்காலத்தில் சில சட்டங்களை அமுல்படுத்த தங்கள் அமைப்பு பரிந்துரைப்பதாக சில விடயககளை சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் உள்ள சகல பிரஜைகளுக்கும் மூன்றுக்கு அதிகமாக பிள்ளைகள் பெற்றுக்கொள்வதை தடைசெய்தல்.

மதரீதியான இன ரீதியான பிரதேசங்கள் வலயங்களை தோற்று விப்பதை தடைசெய்தல்

விவாகம் தொடர்பாக சிங்கள முஸ்லிம் தமிழ் என அனைவருக்கும் ஒரே திருமண சட்டமாக மாற்றுதல்

மத சட்டங்களை சிவில் சட்டங்களாக மாற்றுவதை தடை செய்தல்

நாட்டில் முளைத்துள்ள மத சார்பான அமைப்புகளை தடை செய்தல்

பொது இடங்களில் முகத்தை மறைத்து உடையணிந்து செல்வதை தடை செய்தல்

மேல் குறிப்பிட்ட பரிந்துரைகளை இந்த நாட்டில் சட்டமாக்குவதன் மூலம் இந்த நாட்டின் சொந்தக்காரர்களான சிங்களவர்களின் உரிமைகளை பாதுகாக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Disqus Comments