Friday, May 29, 2015

ரோஹிஞ்சா மக்களுக்காக ஆங் சான் சூகி வாய் திறக்க வேண்டும் என்கிறார் தலாய் லாமா

மியன்மாரில் உள்ள ரோஹிஞ்சா இன மக்களுக்கு உதவ ஆங் சான் சூகி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தப் பிரச்சினை குறித்து கடந்த காலங்களில் தாம் ஆங் சான் சூகியிடம் கலந்துரையாடியிருப்பதாகவும் அது தொடர்பில் அவரால் நடவடிக்கை எடுக்கமுடியும் என தாம் நம்புவதாகவும் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய ஊடகங்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மியன்மாரின் பிரஜைகளாக அங்கீகரிக்கப்படாத ரோஹிஞ்சா மக்களின் பிரச்சினை தொடர்பில் ஆங் சான் சூகி வாய் திறக்க மறுப்பதாக சர்வதேச அளவில் விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் மியன்மாரில் ரோஹிஞ்சாக்கள் விவகாரம் மிகவும் சிக்கலானது.
அங்கு சூகியின் அரசியல்கட்சி இந்த ஆண்டின் இறுதியில் இடம்பெறவுள்ள தேர்தலில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments