Friday, May 29, 2015

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்காக கொழும்பில் ஒரு அமைதி பேரணி. மகஜரும் கையளிப்பு

பர்மாவில் வாழும் முஸ்லீம்களுக்காக, அமைதியான முறையில் எதிர்ப்பும் கொழும்பில் உள்ள பர்மா நாட்டின் தூதுவரிடம் பர்மாவில் அப்பாவி முஸ்லீம்களை காட்டுமிராண்டித்தனமாக கொலை செய்வதை நிறுத்துமாறு மகஜரும் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

இன்று ஜூம்ஆத் தொழுகைக்குப் பின் கொழும்பு 7 தெவட்டஹாபள்ளிவாசல் முன்பாக அமைதியான கண்டனம் தெரிவிக்கப்படதுடன்  அறிக்கையும் கொழும்பில் உள்ள பர்மா (மியண்மார்) தூதுவரிடமும் சமர்ப்பிக்கப்பட்டது.

பர்மாவில்ஆயிரக்கணக்கானகுழந்தைகள்,வயதாணவர்கள் பெண்கள் எனஈன இரக்கமின்றி கொன்றுகுவித்து வருகின்றனர். அவர்களது சொத்துக்கள் சூறையாடப்படுகினற்ன.

அந் நாட்டில் வாழும் சிறுபாண்மை அப்பாவி முஸ்லீம்களை திட்டமிட்டுகொலை செய்வதுடன் இனச்சுத்திகரிப்பையும் மேற்கொண்டுவரும் அந்தநாட்டு அரசாங்கத்தின் கடும்போக்கு மற்றும் பௌத்தமதத் தலைவர்களினதும் சிநதனையானது இந் உலகில்மிகவும் வெறுக்கத்தக்கச் செயலாகும்.

இதனையிட்டு ஜ.நா. மணிதஉரிமைமற்றும் உலகநாடுகள் தலையிட்டு இதனைநிறுத்த வேண்டும் இதற்காக இலங்கை அரசாங்கமும் குரல் கொடுக்கவேண்டும் என்ற நோக்கில் இந்த கண்டன. ஆர்பாட்டம் கதிஜா பவுண்டேசன் அமைப்பால் ஏற்பாடு செய்யபட்டது குறிப்பிடத்தக்கது.

ரோஹிங்கிய முஸ்லிம் மக்களுக்காக இறைவனிடம் பிரார்த்தித்து அமைதியாக எவ்வித அசம்பாவிதங்களும் மின்றி இந்த சமாதான ஊர்வலம் நடந்தாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
Disqus Comments