Sunday, May 24, 2015

8வது IPL சாம்பியன் பட்டம் வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி

8 வது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது.கோ ல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த 8வது பிரிமியர் லீக், 'டுவென்டி-20' தொடரின் பைனலில் சென்னை, மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பவுலிங் தேர்வு செய்தார்.

மும்பை அணிக்கு பார்த்திவ் படேல் டக்-அவுட்டானார். பின் இணைந்த சிம்மன்ஸ், கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடினர். இருவரும் அரை சதம் அடித்தனர். ரோகித் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். சிம்மன்ஸ் 68 ரன்கள் எடுத்தார். போலார்டு (36) அதிரடி காட்டினார். பாண்ட்யா (0) ஏமாற்றினார். மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்தது. ராயுடு (36), ஹர்பஜன் சிங் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.

கடின இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு மைக்கேல் ஹசி (4) சொதப்பினார். சிறப்பாக விளையாடிய ஸ்மித் அரைசதம்(57) விளாசினார். ரெய்னா 28 ரன்னில் அவுட்டானார். பிராவோ 9 ரன்னில் அவுட்டானார். கேப்டன் தோனி 18 ரன்னில் அவுட்டானார். டியூ பிளஸ்சி ஒரு ரன்னில் வெளியேறினார். நேகி 3 ரன்னிலும், அஸ்வின் 2 ரன்னிலும் அவுட்டானார்கள். இறுதியில் சென்னை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் மட்டுமே எடுத்து 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் மும்பை அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
Disqus Comments