நாட்டில் குற்றங்கள் அதிகரித்து காணப்படுவதனால் மீண்டும் மரண தண்டனையினை அமுல்படுத்துமாறு மக்கள் கேட்டுக் கொண்டுள்ளதாகவும், இது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாகவும் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
யாழ். புங்குடுதீவு பாடசாலை மாணவி கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எங்கள் நாட்டில் மரண தண்டனையினை செயற்படுத்துமாறு மக்கள் தொடர்ந்து கோரிக்கை முன்வைத்து வருகின்றனர். ஏன் என்றால் நாட்டில் அந்த அளவிற்கு குற்றச்செயல்கள் அதிகரித்த காணப்படுகின்றன.
மரண தண்டனை நிறைவேற்றுவதன் மூலம் நாட்டில் இடம்பெறுகின்ற குற்றங்களை குறைத்துக் கொள்ள முடியும் என நாட்டு மக்கள் மனதில் பெரிய நம்பிக்கை வெளிப்படுகின்றமையை அண்மைக்காலமாக அவதானிக்கலாம்.
