Monday, May 25, 2015

மருதானை தீவிபத்தில் இதுவரை 3 போ் பலி. சம்பவ இடத்துக்கு றிஷாத் பத்தியுத்தீன் விரைவு

மருதானை எஸ்பின்ஸ்ட்டன் பிரதேசத்தின்  வா்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து அப்பிரதேசத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த தீ விபத்தினால் மூவா் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனா். 

இந்த சம்பவம் இடம்பெற்று ஒரு சில நிமிடங்களுக்குள் அப்பிரதேசத்துக்கு விஜயம் செய்த அகில இலங்கை முஸ்லிம் காங்கிரல்  தலைவரும், கைத்தொழில், மற்றும் வணிகத்துறை அமைச்சருமான றிஷாத் பத்தியுத்தீன் பாதிப்புக்குள்ளான கடைத் தொகுதியினை பார்வை யிட்டதுடன்  இது தொடா்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொலீஸ் உயா் அதிகாரிகளிடத்தில் கேட்டுக் கொண்டார்.

 இதேவேளை இந்த பிரதேசத்தில் தீ விபத்தையடுத்து வாகணப் போக்கு வரத்து நெரிசல்களை காணக் கூடியதாக இருந்தது. விபத்து தொடா்பில் ஏற்பட்டுள்ள சேத விபரங்களை பொலீஸார் மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கப்பெரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Disqus Comments