எவருக்கும் தான் வகிக்கும் எந்தவொரு பதவியில் இருந்தும் இராஜினாமா செய்ய முடியும் என பிரதி வௌிவிவகார அமைச்சர் அஜித் ஜீ பெரேரா தெரிவித்துள்ளார்.
நான்கு அமைச்சர்களின் பதவி விலகலானது அவர்கள் இந்த அரசாங்கத்தின் பங்குதாரர்கள் இல்லை என்பதையே காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வினவப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அல்லது அதன் உறுப்பினர்களின் தீர்மானம் தொடர்பில் கருத்து வௌியிட தனக்கு எந்தவொரு உரிமையும் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி முழு மனதுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இருக்கும் எனவும் பிரதி வௌிவிவகார அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
(அத தெரண தமிழ்)
