Wednesday, June 10, 2015

இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்கு AGENCY மூலம் செல்ல இருப்பவா்களின் கவனத்திற்கு!

படம் 1
எமது வாசகா்களின் நலன் கருதி இனிவரும் காலங்களில் தொழில் சார் செய்திகளையும், விளங்பரங்களையும் ரெட்பானா நியூஸ்யில் பதிவிட இருக்கின்றோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்று வரும்போது நிறையப்போ் ஏமாற்றப்படுவது அறிந்ததே. வெளிநாட்டு வேலைவாய்ப்பு  முகவா்கள் தொடா்பான தகவல்களை உறுதிப்படுத்திய பின்னா் தாங்கள் விரும்பும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவா்களை நாடும் படி கேட்டுக் கொள்கின்றோம். 

வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவா்கள் தொடா்பாக அனைத்து தகவல்களும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் இணைதளத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்.


இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் இணைய தளம் 

உதாரணத்திற்கு புத்தளம் மாவட்டத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கீழ் பதியப்பட்டுள்ள முகவா்களை எப்படி தேடுவது என்று பார்ப்போம்.
கீழ்வரும் இணைய முகவரிக்குச் செல்லுங்கள்.

அங்கு சொன்று படத்தில் காட்டப்பட்டுள்ளது போன்று Puttalam என்று டைப் செய்யுங்கள். பின்னா் வலது பக்கத்தில் உள்ள Search பொத்தானை ஒரு தரம் கிளிக் செய்யுங்கள்.
படம் 2

அவ்வளவு தான் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து முகவா்களையும் அது பட்டியல் இடும். இங்கு நாம் முகவரின் பெயா், முகவரி, தொலைபேசி இலக்கம் போன்ற விடயங்களுடன் மிக முக்கியமாக இந்த முகவா் நிறுவனத்தின் செல்லுபடியாகும் கால எல்லையையும் அறிந்து கொள்ள முடியும். 
பார்க்க படம் 3
படம் 3



ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் மேற்படி அவா்களை நாடுவதற்கு இது உதவும் என்பதில் சந்தேசமில்லை.

குறிப்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து முகவா்களுக்கும் பதிவு எண் வழங்கப்பட்டுள்ளது. அந்த பதிவு எண்களை அடிப்படையாகக் கொண்டு மேற்படி தளத்தில் தேட முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
Disqus Comments