Monday, July 6, 2015

இலங்கை பாதிஸ்தான் டெஸ்ட் தொடா் யாருக்கு? இறுதிப்போட்டி இலக்கு 377

தமது இரண்டாம் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி மதிய நேரத்திற்கு முன்பாகவே அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 313 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதன் மூலம் பாகிஸ்தானுக்கு 377 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்ட்டுள்ளது.
இலங்கை அணி சார்பாக அபாரமாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் அஞ்சலோ மத்யூஸ் தனது 5 ஆவது சதத்தை இன்றைய தினம் பூர்த்தி செய்து 122 ஓட்டங்களைக் குவித்து இறுதியாக ஆட்டமிழந்தார்.
மேலும் சந்திமால் அரைச்சதம் கடந்து 67 ஓட்டங்களை குவித்தமை குறிப்பிடத்தக்கது. சந்திமால்  மற்றும் மத்யூஸ் இணைந்து 117 ஓட்டங்களை இணைப்பாட்டமாக குவித்தமை விசேட அம்சமாகும்.
பந்துவீச்சில் பாகிஸ்தான அணி சார்பில் இம்ரான் கான் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தமது முதல் இனிங்ஸில் இலங்கை அணி 278 ஓட்டங்களையும் பாகிஸ்தான் அணி 215 ஓட்டங்களையும் குவித்திருந்தன.
Disqus Comments