Wednesday, July 22, 2015

இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுமி நர்சுடன் திருமணம் (VIDEO)

நியூயோர்க் நகரில் மெலோடிஸ் செண்டர் என்ற குழந்தைகளுக்கான புற்று நோய் மருத்துவமனை உள்ளது. இங்கு 4 வயதே ஆன அப்பி சாய்லெஸ் என்ற சிறுமி இரத்தப் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார்.
சிறுமி அப்பி சாய்லெஸ் சிகிச்சை பெற்றுவரும் வார்டில் ஆண் நர்சாக பணியாற்றி வருகிறார் மேட் ஹிக்லிங்.
மேட் ஹிக்லிங்கின் அன்பான உபசரிப்பால் அப்பிக்கு அவரை நன்கு பிடித்துப் போய்விட்டது. அப்பி தனது தாயாரிடம் ஹிக்லிங்கை மிகவும் விரும்புவதாகவும் அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதை அப்பியின் தாயார் ஹிக்லிங்கிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட ஹிக்லிங்க் நீண்ட நாட்கள் வாழ முடியாத சிறுமியின் ஆசையை நிறைவேற்ற விரும்பி இந்தத் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.
உடனடியாக இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மருத்துவமனையிலுள்ளவர்கள் அனைவரும் சேர்ந்து இந்தத் திருமணத்திற்கு 24 மணி நேரத்தில் ஏற்பாடுகளை செய்து முடித்தனர்.
4 வயதேயான மணப்பெண்ணுக்கு வெள்ளை நிறத்தில் புத்தாடை அணிவித்து தலையில் கையில் பூச்செண்டு கொடுத்து அழைத்து வந்தனர்.
அவர் மணமகனை வந்து கட்டிப் பிடித்தார். அவரது திருமணத்திற்கு பூக்கள் நன்கொடையாக வழங்கப்பட்டு இருந்தது.
பின்னர் மணமக்கள் தங்களுக்குள் மோதிரத்தை மாற்றிக்கொண்டனர்.
ஹிக்லிங்க் ஏற்கனவே திருமணமானவர். இது குறித்து அவர் கூறும் போது இது எனது வாழ்நாளில் ஒரு சிறந்த நாள் என தெரிவித்தார்.

Disqus Comments