Wednesday, July 22, 2015

SL vs PAK போட்டிகள் - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் அவசர வேண்டுகோள்…!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேதற்போதுநடைபெற்றுக் கொண்டிருக்கும் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் ஏதாவது ஒருநாடு வெற்றி பெறலாம்.ஆனால் வெற்றியின் போதும்போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதும் நமது நாட்டின் ஐக்கியத்திற்கும் சகவாழ்வுக்கும் பாதிப்புஏற்படாத வகையில் சகலரும் நடந்துகொள்ள வேண்டும்.

எமது தாய் நாடான இலங்கையில் முஸ்லிம்களாகிய எமக்குநீண்டகால வரலாறு உண்டு. வரலாறு நெடுகிலும் நாட்டுக்காக பலபங்களிப்புகளை செய்து, நாட்டுப் பற்றுடனும், ஏனைய சமூகங்களுடன் ஒற்றுமையாகவும் சகவாழ்வுடனும் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். காலாகாலமாக முஸ்லிம்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் இடையேகாணப்பட்டுவரும் ஒற்றுமையையும் சகவாழ்வையும் சீர்குலைக்கும் முயற்சியில் பலதீயசக்திகள் ஈடுபட்டுவரும் இந்நிலையில் சிறுபான்மையாக வாழ்ந்து வரும் நாம் மிகுந்த அவதானத்துடனும் நிதானத்துடனும் செயற்படவேண்டும். 19.07.2015 ஆம் திகதி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சிலர் விளையாட்டுமைதானத்தில் பிழையாகநடந்து கொண்டதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்.

சர்வதேசவிளையாட்டுகளின் மூலம்நாடுகளுக்கிடையிலான உறவுகள் பலப்படுகின்றன. விளையாட்டுகள் என்பவை ஓய்வு நேரத்தை குதூகலமாகவும் மனதுக்கு இதமாகவும் கழிப்பதற்கான வாய்ப்புகளைத் தருகின்றன.மேலும் அவை சிறந்தஉடற்பயிற்சியாக அமைகின்றன. இந்த எல்லைகளை தாண்டி பரஸ்பரவெறுப்பையும்  இனமுறுகல்களையும் தோற்றுவிக்கும் ஊடகங்களாக அவற்றை நாம் மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனமானதல்ல.மேலும் இவற்றை அடிப்படையாகக் கொண்ட  சூதாட்டங்கள் மற்றும் நேரத்தை வீணாகக் கழித்தல் போன்ற ஷரீஅத் தடைசெய்த விடயங்களை ஒவ்வொரு முஸ்லிமும் தவிர்ந்து கொள்ளவேண்டும்.

இது போன்ற உணர்வுபூர்வமானநிகழ்வுகள் நடைபெறுகின்றபோது உலமாக்கள் தமதுகுத்பாப் பிரசங்கங்களையும் உரைகளையும்; இன ஐக்கியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைத்துக் கொள்ள வேண்டுமெனவும் மஸ்ஜித் நிர்வாகிகள் இந்தவிடயத்தில் கவனம் செலுத்தவேண்டுமெனவும்அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவேண்டிக் கொள்கின்றது.

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
Disqus Comments