லண்டனைச் சேர்ந்த ரெஸ்க்யூ எனும் அரசு சார்பற்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், ஆபாச படங்களை பார்க்கும் மாணவர்களின் சராசரி வயது 9 என்று தெரியவந்துள்ளது.
தென்னிந்தியா முழுவதும் இந்த அமைப்பு கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தனது ஆய்வை துவங்கியது.
அந்த ஆய்வின் முடிவுகளை அந்த நிறுவன செயல் அலுவலர் அபிஷேக் கிளிபோர்ட் கோவையில் வெளியிட்டார்.
கோவையில் 10 கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 71 சதவீத மாணவர்கள் ஆபாச படங்களுக்கு அடிமையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபாச படங்களை பார்ப்பவர்களின் சராசரி வயது 9.6 என்றும் தெரியவந்துள்ளது.
இதுவே தென்னிந்தியா முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆபாச படம் பார்க்கும் மாணவர்களின் சதவீதம் 69ஆக உள்ளதாகவும், ஆபாச படம் பார்ப்பவர்களின் சராசரி வயது 9.4ஆக இருப்பதாகவும் அந்த ஆய்வுகள் சொல்கின்றன.
இதில் கொடூரமான பாலியல் வல்லுணர்வு காட்சிகளை 31 சதவீத மாணவர்கள் விரும்பி பார்ப்பதாகவும் அந்த ஆய்வுகள் சொல்கின்றன.
ஆபாச படம் பார்க்கும் மாணவர்களில் 93 சதவீதம் பேர், போதை பொருள் போன்று ஆபாச படங்கள் தங்களை அடிமைப்படுத்தி விட்டதாக தெரிவித்துள்ளனர்.
86 சதவீதம் மாணவர்கள் இவை பாலுணர்வை தூண்டி வருவதாக தெரிவிக்கின்றனர்.
இதில் 54 சதவீதம் பேர் பாலியல் வல்லுணர்வுக்கு இந்த காட்சிகள் தூண்டுவதாக தெரிவித்துள்ளனர்.
கோவையில் மட்டும் கணக்கெடுத்தால் ஆண்டுக்கு 49 ஆயிரம் பாலியல் வல்லுணர்வு சம்பவங்களுக்கு இந்த ஆபாச படங்கள் காரணமாக இருக்கக் கூடும் என்று அமைப்பினர் எச்சரிக்கின்றனர்.
குழந்தைகள் பாலியல் உறவு காட்சிகளை 45 சதவீத மாணவர்கள் விரும்பி பார்க்கின்றனர். இதுதான் குழந்தைகள் மீதான பாலியல் வல்லுணர்வு அதிகரிக்க முக்கிய காரணம் என்று தெரிகிறது.
கோவையில் 84 சதவீதம் மாணவர்கள் செல்போன்களில் ஆபாச படங்களை விரும்பி பார்க்கின்றனர். இது தென்னிந்திய அளவில் 50 சதவீதமாக இருக்கிறது.
ஆபாச படங்களை பார்க்கும் மாணவர்களில் 18 சதவீதம் பேர் விலைமாதர்களிடம் செல்வதாகவும், ஆபாச படங்களை பார்க்கும் பெரும்பாலான மாணவர்கள், பெண்களை நிர்வாணமாக பார்க்க விரும்புவதாகவும் ஆய்வு முடிவுகள் சொல்கிறது.
மாணவிகளும் கணிசமான அளவில் ஆபாச படங்களை பார்ப்பதாக சொல்லும் இந்த ஆய்வு, பள்ளியில் வெறும் 10 சதவீதமாக உள்ள ஆபாச படங்களை பார்க்கும் மாணவிகளின் எண்ணிக்கை, கல்லூரியில் 50 சதவீதத்துக்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கிறது.
தமிழகத்தில் 4 லட்சம் மாணவர்கள் தகாத உறவில் ஈடுபடுகின்றனர் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. எப்படியும் 1011 மாணவர்கள் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
ஒவ்வொரு மாதமும் 11 ஆயிரம் மாணவிகள் கருக்கலைப்பு செய்கிறார்கள் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களது குழந்தைகள் நீண்ட நேரம் கணிப்பொறி முன்போ, செல்போனிலோ இணைய தளத்தில் மூழ்கினால் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.