மீன்பிடிக் கைத்தொழில் துறையின் ஊடாக சர்வதேசத்தை வெற்றிகொள்வதற்கு மத்தள வானூர்தி தளத்தை பயன்படுத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாத்தறை திக்வெல்ல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
நாட்டின் மீன்பிடிக் கைத்தொழிலை மேம்படுத்தி அதனை ஏற்றுமதி கைத்தொழிலாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்தள வானூர்தி தளத்திற்கு செல்லும் பாதையில் அண்மைக் காலங்களில் மிளகு போன்ற பொருட்களை வெயிலில் உலர வைக்கப்படுகின்றமையை காணக்கிடைத்தது.
ஆனால், அந்த செயற்பாடு நாட்டுக்கு அவசியமில்லை.
எதிர்வரும் 4 அல்லது 5 வருடங்களில் மத்தள வானூர்தி தளத்தின் ஊடாக உள்நாட்டு மீன்வள உற்பத்திகளை சர்தேச நாடுகளுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜப்பான், சிங்கப்பூர், துபாய் போன்ற மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய சந்தை என்பவற்றுக்கு உடனடியாக ஏற்றுமதி செய்யக் கூடிய வாய்ப்பு கிடைக்கும்.
நாட்டின் பொருளாதாரத்தையும், ஸ்தம்பிதம் அடைந்துள்ள மத்தள வானூர்தி தளத்தையும் வருமானத்தையும், அதிகரிக்க இது சிறந்தவழியாக அமையும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.