Sunday, August 9, 2015

20 வருடங்களின் பின்னா் அரச பணம் இல்லாமல் சுதந்திரக் கட்சி போட்டியிடுகின்றது.

(சோனகர்.காம்) 20 வருடங்களுக்கு பிறகு இம்முறை தேர்தலிலேயே  சுதந்திரக்கட்சி தமது சொந்தப்பணத்தை செலவு செய்து தேர்தலை சந்திப்பதாக தெரிவித்துள்ளார் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க.
 கடந்த பல வருடங்களாக அரச பணத்திலேயே அக்கட்சியின் தேர்தல் நடவடிக்கைகள் இடம்பெற்று வந்ததாகவும் அரச ஊடகங்கள் முதல் அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி பொது சேவை ஊழியர்களின் பலத்தையும் கொண்டே இதுவரை தேர்தல் பிரச்சாரங்கள் செய்து வந்தவர்கள் பல வருடங்களின் பின்னர் முதற்தடவையாக இப்போது சொந்தப் பணத்தை செலவு செய்வதனால் அதன் அருமை விளங்கியிருப்பதாகவும் அதனாலேயே முன்னொரு போதும் இல்லாதளவு அக்கட்சியின் பிரச்சார நடவடிக்கைகள் முடக்கிப் போய் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments