Wednesday, August 19, 2015

இது ஆரம்பம் மட்டுமே.. 5727 வாக்குகள் பெற்ற ஞானசார தேரரின் அறிவிப்பு.

பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாலர் ஞானசார தேரர் தனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மற்ற கட்சிகளை போல் சுதந்திரமாக பிரச்சாரம் செய்வதற்கு இடையூறுகள், தமக்கு எதிராக பல வகையான சேறுபூசும் நடவடிக்கைகள், ஊடகங்களில் ஆதரவின்மை அனைத்தையும் தாண்டி, களுத்துறையில் நான்காவது சக்திமிக்க அரசியல் கட்சியாக தம் கட்சியை உருவாக்க வாக்களித்த அனைவருக்கும் நன்றி.

சிங்க தேசத்தை காக்க ஆதரவளித்த 5727 சிங்கக் குட்டிகளுக்கும் மனமார்ந்த நன்றி, 

இது ஆரம்பம் மட்டுமே..

என அவர் தெரிவித்துள்ளார்.
Disqus Comments