பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் அவர்கள் எதிர்வரும் மார்ச்
மாதத்தில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று உரோமிலுள்ள இலங்கை
உயர்ஸ்தானிகர் நாவலகே பேர்னாட் குரே தெரிவித்தார்.
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் புஷ்பா ராஜபக்ஷ ஆகிய இருவரும் இன்று (20) வத்திக்கானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.
பாதுகாப்பு செயலாளரும் அவரது பாரியாரும் இன்றைய தினம் பாப்பரசரைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டதுடன் அழைப்புக்கான வேண்டுகோளையும் விடுத்ததாக பேர்னாட் குரே மேலும் தெரிவித்தார்.