Wednesday, November 20, 2013

பாதுகாப்பு தலைக்கவச புதிய சட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

மோட்டார் சைக்கிளில் செல்வபவர்களுக்கு தலைக்கவசம் குறித்து பிறப்பிக்கப்பட்ட புதிய சட்டத்தை செயற்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

புதிய சட்டத்தை பயன்படுத்தி பெரிய வியாபாரிகள் அதிக பணம் கொடுத்து தலைக்கவசம் கொள்வனவு செய்கின்ற போதும் குறைந்த வருமானம் பெறுவோர் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

எனவே இதனை கருத்திற் கொண்டு பாதுகாப்பு தலைக்கவசம் அணியவென கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிறப்பிக்கப்பட்ட புதிய சட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

1981 21ம் இலக்க மோட்டார் வாகன போக்குவரத்து சட்ட 158 (2) மற்றும் 237 சரத்துக்களில் புதிய ஏற்பாடுகளை தற்போதைய போக்குவரத்து அமைச்சர் சேர்த்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்திருந்தது.

இதன் அடிப்படையில் தலைக்கவசத்தின் பட்டிகள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், முகம் தெளிவாக தெரியக்கூடிய வகையில் தலைக்கவசம் காணப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
Disqus Comments