(Azeem Muhammad)இது வரை காலமும் நடந்த பொது தேர்தல்களில் எம்மால் ஒரு முஸ்லிம் பாராளுமன்றபிரதிநிதித்துவத்தினை பெற்றுக் கொள்ளமுடியாத நிலையில் நாம் இருக்கின்றோம். சுமார் 50-60 ஆயிரம்முஸ்லிம் வாக்கு வங்கியை கொண்ட எமது மாவட்டத்தில் குறைந்தது 30 ஆயிரம் வாக்குகளையாவதுஒருவருக்கு அளித்து எமக்கான பிரதிநிதியோன்ரை தெரிவு செய்ய முடியாதவர்களாக ஆகிவிட்டோம் .இல்லை இல்லை ஆக்கப்பட்டு விட்டோம்.
ஏன் ??????
எமது தேவைகளை மட்டும் நிறைவேற்றிக்கொண்டால் மட்டும் போதும் என்ற என்ற சுயநலமானசிந்தனையில் நாம் இருகின்றோம் எமக்கு தேவையான விடயங்களை சகோதர இன அரசியல்வாதிகளிடத்தில் நாம் செல்கிறோம் கிட்டத்தட்ட 4 தசாப்தங்களுக்கு மேலாக அனுராதபுர மாவடத்தில் இருந்துஒருவரை அனுப்புவது அவசியமாகும் அவ்வாறான நிலை காணப்பட்டால் அனுராதபுர மாவட்டத்திலிருந்துஒரு முஸ்லிம் பிரதிநிதியினைக் கூட பாரளுமன்றத்திட்கு ஒருபோதும் அனுப்ப முடியாமல் போய்விடும்
இது எவ்வாறு?
எம்மில் சில முகவர்கள் ஆளுக்கொரு சகோதர இன வேட்பாளரை கூட்டி வந்து மேடை போட்டுஅவர்களுக்கான ஆதரவை கேட்டார்கள். இப்படி அதிக எண்ணிக்கையில் எமது வாக்குகள் திட்டமிட்டுசிதறடிக்கப் படுக் கொண்டே வருகின்றது.
அத்துடன் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் .....
மஹிந்த ராஜபக்ச இந்த நாட்டுமுஸ்லிம்க
ளுக்கு செய்த அளப்பரிய சேவைகள்.2013
1) 09.01 அநுராதபுரம் மல்வத்து ஓயா பள்ளிவாயல் தாக்கப்பட்டது.
2) 26.01.2013 இரத்தினபுரி 150 பௌத்த தேரர்களைக் கொண்ட
குழு ஜெய்லானி பள்ளிவாயலைத் தாக்குவதற்கான முயற்சி.
3) 09.02.2013 மாத்தறை கந்தர பள்ளிவாயல் தாக்குதல்.
4)10.02.2013 குருநாகல் நாரம்மல பள்ளிவாயலுக்கு சுபஹ் தொழுகைக்காக சென்றவர் தாக்கப்பட்டார்.
5)22.02.2013 காலி ஹிரும்புற முஹ்யித்தீன் ஜூம்ஆ பள்ளிவாயல் தாக்கப்பட்டது.
6) 28.02.2013 கேகாலை ஜூம்ஆ
பள்ளிவாயல் தாக்கப்பட்டு ஜன்னல்கள் உடைக்கப்பட்டன.
7) 03.03.2013 இரத்தினபுரி ஓபநாயக்க பள்ளிவாயல்
தாக்குதல்.
8) 03.03.2013 கம்பஹா மஹர பள்ளிவாயல் தாக்கப்பட்டது.
9)05.03.2013 கம்பஹா மஹர
பள்ளிவாயலை மூடுமாறு அமைச்சர் உத்தரவு.
10) 28.03.2013 கொழும்பு பெபிலியான
பிரதேசத்தில் அமைந்துள்ள பெசன் பக் தலைமை காரியாலயம் தாக்கப்பட்டது.
11) 16.04.2013 கண்டி கம்பளை நகரில் முஸ்லிம்
சகோதரருக்கு சொந்தமான லக்கி எம்போரியம்
தாக்கப்பட்டது.
12) 01.07.2013 மட்டக்களப்பு நாவலடி மஸ்ஜிதுன்
நூர் ஜூம்ஆ பள்ளிவாயல் தாக்கப்பட்டது.
13) 17.07.2013 கொழும்பு கிரான்பாஸ் பள்ளிவாயல்
தாக்கப்பட்டது.
14) 15.09.2013 திருகோணமலை புல்மோட்டைப்
பிரதேசத்தில் முஸ்லீம்களுக்கு சொந்தமான 1500
மேற்பட்ட ஏக்கர் காணிகளை பௌத்த கோவில்
அமைப்பதற்காக கையகப்படுத்தியமை.
15) 08.11.2013 மாத்தறை இஸ்ஸதீன் மாவத்தையில் அமைந்துள்ள மஸ்ஜிது தக்வா பள்ளிவாயலின்
பதிவினை புத்தசாசன அமைச்சு இல்லாமல் செய்தது.
16) 17.11.2013 அநுராதபுரம் கெக்கிராவ யு 9
வீதியில் அமைந்துள்ள ஜூம்ஆ பள்ளிவாயல்
காடையர்களால் தாக்கப்பட்டது.
17) 01.12.2013 மொறட்டுவ பல்கலைக் கழகம்
முஸ்லிம் மாணவிகள் நிகாப்
அணிந்து வருவதை தடைசெய்தது.
18) 12.12.2013 தெகிவளை பொலிஸ் நிலையம்
தாருஸ் ஸாபி பள்ளிவாயில்
தொழுகை நடாத்துவதை நிறுத்துமாறு உத்தரவிட்டது.
19) 15.12.2013 தேகிவளை அத்திடிய மாவத்தையில்
அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹிபா பள்ளிவாயலில்
தொழுமை நடாத்துவதை நிறுத்துமாறு தெகிவளைப்
பொலிஸ் நிலையத்தினால் கோரப்பட்டது.
20) 31.12.2013 கண்டி அம்பதென்ன
மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாயலுக்கு தாக்குதல்.