Saturday, August 15, 2015

மஹிந்த தேர்தலிலிருந்து விலக வேண்டும் - MERVIN SILVA

மஹிந்த ராஜபக் ஷ பதவி மோகத்தை கைவிட்டு தேர்­த­லி­லி­ருந்து விலகி சிரேஷ்ட உறுப்­பினர் ஒரு­வ­ருக்கு வாய்ப்­ப­ளிக்க வேண்டும். இல்­லா­விட்டால் தேர்­தலின் பின் அவர் சிறையில் அடைக்­கப்­ப­டுவார் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரி­வித்தார்.
மேலும் வேட்­பு­ம­னுத் ­தாக்­கலின் போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மைத்­துவ அதி­கா­ரத்­துடன் செயற்­பட்­டி­ருந்தால் கட்சி பிள­வு­பட்­டி­ருக்கும் எனவும் தெரி­வித்தார். நார­ஹேன்­பிட்­டியில் அமைந்­துள்ள அவ­ரது இல்­லத்தில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறு­கையில், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மஹிந்த ராஜபக் ஷவுக்கு அனுப்­பிய கடிதம் மிகவும் நுட்­ப­மான முறையில் தயா­ரிக்­கப்­பட்­ட­தாகும்.
இதன்­மூலம் ஜனா­தி­ப­தியின் சாணக்­கி­யத்தை தெரிந்து கொள்­ளலாம். வேட்­பு­ம­னுத் ­தாக்­கலின் போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கட்­சியின் தலை­மைத்­துவ அதி­கா­ரத்­துடன் செயற்­பட்­டி­ருந்தால் சுதந்திரக் கட்­சி பிளவுபட்­டி­ருக்கும். கட்சி மீது ஆத­ரவு இருந்­த­மை­யால்தான் மஹிந்த ராஜபக் ஷவுக்கு இட­ம­ளித்தார் என அவரே குறிப்­பிட்­டுள்ளார். மேலும் 1970ஆம் ஆண்டு சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்­கவை நீக்­கு­வ­தற்­கான சதித்­திட்­டத்­திலும் மஹிந்த ராஜபக் ஷ இருந்தார்.
நான் அவ­ருக்கு சவால் விடு­கின்றேன். முடி­யு­மானால் 1970 ஆம் ஆண்டு நடந்­த­தைப்­பற்றி பகி­ரங்க விவா­தத்­திற்கு வரட்டும். இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்­கள மக்கள் மத்­தியில் குரோ­தத்தை ஏற்­ப­டுத்­தி­யது மஹிந்­தவின் ஆட்­சி­யாகும். என்­றாலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன புத்­தி­யுடன் செயற்­பட்­டதால் கட்சி பாது­காக்­கப்­பட்­டது.
கட்­சியில் தொடர்ந்தும் ராஜபக் ஷவுக்கு மாத்­திரம் சந்­தர்ப்பம் வழங்­க­மு­டி­யாது. கட்­சியில் இருக்கும் சிரேஷ்­ட­ உறுப்பினர்­க­ளுக்கும் சந்­தர்ப்பம் வழங்­கப்­பட வேண்டும்.
அவர் இந்த தேர்­தலில் போட்­டி­யி­டாமல் ஒதுங்­கி­யி­ருந்தால் தற்­போது போன்று ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும் சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்­த­வர்­க­ளா­கத்தான் இருந்­தி­ருப்பார்கள். இதை இல்­லாமல் செய்­தது மஹிந்­ததான். இப்­போது வேண்­டு­மா­னாலும் மஹிந்த ராஜபக் ஷ புத்­தியைப் பாவித்து பொறாமை, பதவி மோகம் இல்­லாமல் இந்த தேர்­தலில் இருந்து விலகி சிரேஷ்ட உறுப்­பினர் ஒரு­வ­ருக்கு சந்­தர்ப்பம் வழங்­க­வேண்டும் என்றார்.
Disqus Comments