(பிராந்திய நிரூபர்) ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் 2015ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நவவி(இலக்கம் - 10), பைரூஸ் (இலக்கம் - 02) மற்றும் நஸ்மி (இலக்கம் - 09) ஆகியோரை ஆதரித்து விருதோடைக் கிராமத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஆயிரக் கணக்காக மக்கள் கலந்து கொண்டனர்.
நேற்றை கூட்டத்தின் பிரதம அதிதியாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரல் தலைவர், அமைச்சர் றிஷாத் பத்தியுத்தீன் அவர்கள் கலந்து கொண்டதோடு ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் 2015ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நவவி(இலக்கம் - 10), பைரூஸ் (இலக்கம் - 02), மற்றும் நஸ்மி (இலக்கம் - 09) ஆகியோரும் கலந்துகொண்டனர்.
விருதோடை மக்களால் ஏற்கனவே எமது கிராமத்தின் பிரதான பாதையை புனர் நிர்மானம் செய்து கொடுப்பவர்களுக்கு முழு ஆதரவும் வழங்கப்படுப்படும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் அம்மக்களின் வேண்டுகோளை ஏற்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவர் அமைச்சர் றிஷாத் பத்தியுத்தீன் அவர்கள் முன் வந்து புனர் நிர்மானம் வேலைகளை நேற்று உத்தியோக ப10ர்வமாக ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
என்னை தேர்தலில் வெற்றிபெறச் செய்யுங்கள், அதைச் செய்து தருகின்றோம் இதைக் செய்து தருகின்றோம் என்று வெறும் வாக்குறுதிகளை மட்டும் அள்ளி வீசி விட்டு அடுத்து தேர்தல்காலத்தில் எம்மை சந்திக்கும் அரசியல்வாதிகள் பட்டியலில் இருந்து நீங்கீ தேர்தலுக்கு முன்னரே வேண்டுகோளை நிறைவேற்றித் தந்த அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிஷாத் பத்தியுத்தீன் அவர்களுக்கு விருதோடை மக்கள் சார்பாக நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.