Wednesday, September 2, 2015

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 64வது மாநாடு இன்று ஜனாதிபதி தலைமையில்



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64ஆவது மாநாட்டு நிகழ்வுகள் இன்று பொலன்னறுவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளது. 

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் கட்சியின் ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொள்வார்களென எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவிருக்கும் கட்சியின் 64 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்விற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர்களான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களுக்கும் உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Disqus Comments