யால சரணாலயம் இன்று முதல் எதிர்வரும் 7 ஆம் திகதிவரை மூடப்படவுள்ளதாக வனப்பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் சுற்றுலாப்பயணிகள் யால சரணாலயத்தை பார்வையிட முடியாது என வனப்பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
யால சரணாலயத்தில் நிலவும் வறட்சி காரணமாகவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதனையும் நோக்காகக் கொண்டு சரணாலயத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனப்பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.டீ.ரத்நாயக்க தெரிவித்தார்.
சரணாலயத்திலுள்ள விலங்குகளுக்கு நீர் வழங்குவதற்காக நீர்த்தடாகம் மற்றும் சிறிய நீர்நிலைகளின் புனரமைப்புப் பணிகளை முன்னெடுக்க திட்டமிடப்படுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.