ரத்த கொதிப்புள்ளவர்கள் முதலில் அமைதியாகவும், மகிழ்ச்சியோ அல்லது துன்பமோ என அதிகளவு உணர்ச்சிகளை காட்டக்கூடாது.
இவை நம்மை அதிகளவு பாதிக்கும். வேலை நேரம் போக அதிகளவு ஓய்வெடுக்க வேண்டும்.
முடிந்தளவு மன அழுத்தம் குறைக்கும் தியான முறைகளை பின்பற்றலாம்.
ரத்த கொதிப்புக்கு மலச்சிக்கலும் முக்கிய காரணம். சரியான நேரத்தில் எப்படி உணவு உட்கொள்கிறோமோ அதுபோன்று மலம் கழித்தலும் குறித்த காலத்தில் முடிக்க வேண்டும்.
அதிகளவு பழம், சுத்த பசும்பால் மற்றும் நிறைய தண்ணீர் அருந்தினால், மலச்சிக்கல் வராது.
அதிக நேரம் ஓய்வின்றி கண்விழிக்கக் கூடாது. அதிகளவு கோபத்தை காட்டக்கூடாது. காபி, டீ, கோகோ பானங்களை தவிர்க்க வேண்டும்.
புகையிலை சம்பந்தமான எதையும், மதுவையும் பயன்படுத்தக் கூடாது.
மூன்று பற்கள் வெள்ளைப் பூண்டை எடுத்து தோலுரித்து நசுக்கி 150 மி.லி, பசும்பாலில் போட்டுக் காய்ச்சவும். பால் கொதி வந்து பூண்டு பற்கள் வெந்ததும் இறக்கி ஆறவிட்டு, பின் சிறிது ஆறியதும் பாலைக்குடித்து விட்டு, பூண்டு பற்களை நன்றாக மென்று விழுங்கி விடவும்.
இதே போன்று தினமும் செய்து வந்தால், நாளடைவில் படிப்படியாய் ரத்தக்கொதிப்பு அடங்கி குணமாகும்.