Wednesday, April 6, 2016

உணவு விற்பனை நிலையங்களை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கொழும்பில் உணவு வகைகளை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
இதன் பிரகாரம் காலாவதியான உணவு மற்றும் குளிர் பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என்பது தொடர்பில் பரிசோதனை செய்யப்படவுள்ளதாக பிரதம சுகாரதார வைத்திய அதிகாரி டொக்கடர்.ருவன் விஜயமுனி தெரிவித்தார்.
கோட்டை, புறக்கோட்டை, பொரளை ஆகிய பகுதிகளில் வீதி ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள விற்பனை நிலையங்களில் இன்று முதல் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளன.
காலாவதியான இனிப்பு பண்டங்கள் குளிர்பானங்கள் விற்பனை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை பொருட்களை கொள்வனவு செய்யும் போது அதில் அச்சிடப்பட்டுள்ள காலவதியான திகதி குறித்து அவதான செலுத்துமாறு நுகரவோரிடம் பிரதம சுகாரதார வைத்திய அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வீதி ஓரங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் இன்று முதல் ஆரம்பிக்கபடும் பரிசோதனை
நடவடிக்கைகளுக்காக இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவு ம் அவர் தெரிவித்தார்.
Disqus Comments