பல்கலைக்கழக பேராசிரியர்களின் பிரச்சி னைகளை தீர்த்து வைப்பது தொடர்பில் அரசுக்கு ஒருமாத காலமே அவகாசம் வழங் கப்பட்டுள்ளது அவகாசம் மீறப் பட்டால் ஜுலை மாதம் 10 ஆம் திகதி பாரிய வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்போம் என பல்கலைக்கழக பேராசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக அச்சங்கத்தின் ஏற்பாட்டாளர் சந்திர குப்த தெனுவர கேசரிக்கு கருத்து தெரிவிக்கையில்,
பல்கலைக்கழக பேராசிரியர்கள் தமது ஆறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாமையை மையப்படுத்தி கடந்த 3 ஆம் திகதி அடையாள வேலை நிறுத்த போராட்டமொன்றை நடத்தியிருந்தோம். இருப்பினும் இது குறித்து அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. இந்நிலையில் பேராசிரியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமது ஆறு கோரிக்கைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளோம்.
இதற்கமைய தமது கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றும் என எதிர்பார்க்கிறோம். இருப்பினும் அரசிற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்குகின்றோம் இந்த அவகாசத்தினை அரசு உரிய முறையில் பிரயோகப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.