Monday, June 9, 2014

கராச்சி விமான நிலையத்தில் மோதல்: 21 பேர் பலி

பாகிஸ்தானின் மிகவும் சுறுசுறுப்பான விமான நிலையமான கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தீவிரவாதிகளுக்கும் படையினருக்கும் இடையில்  இடம்பெற்ற மோதலில் 21 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆயுதங்கள் மற்றும் கிரேனட்டுகளுடன் விமான நிலையத்தின் சரக்கு பகுதிக்குள் புகுந்த தீவிரவாதிகளுக்கும் படையினருக்கும் இடையில் நேற்றிரவு 11.30 மணியளவில் மோதல் ஆரம்பமானது.

இரு தரப்பினருக்கும் இடையில் சுமார் 5 மணிநேரம் மோதல்கள் இடம்பெற்றன. இதில் இரண்டு விமானங்களும் சேதமடைந்துள்ளன.

இந்த சம்பவத்தில் தீவிரவாதிகள் 10 பேர் கொல்லப்பட்டதாகவும் பலியானவர்களில் விமான நிலையத்தின் பணியாளர்கள் இருவர் அடங்குவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Disqus Comments