Monday, June 9, 2014

சவூதி: 30 ஆயிரம் போலி எஞ்சினியர்கள்! 1000க்கு மேற்பட்டோர் கைது.

சவூதியில் 1640 போலி பொறியியல் சான்றிதழ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் 30 ஆயிரம் போலி பொறியாளர்கள் உள்ளதாகவும் சவூதி எஞ்சினியரிங் கவுன்ஸில் அறிவித்துள்ளது.
அரபு நாடுகளில் போலி சான்றிதழ்கள் மூலம் உயர் பதவிகளுக்கான வேலைகளில் பலர் சேர்ந்துள்ளனர். இதனைக் கண்டுபிடிக்க சவூதியில் தற்போது மும்முரமான சோதனை நடைபெற்றுவருகிறது. சவூதி எஞ்சினியரிங் கவுன்ஸில் நடத்தும் இச்சோதனையில் இதுவரை 1640 போலி பொறியியல் சான்றிதழ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போலி சான்றிதழ்கள் கொடுத்துள்ளோரில் 36 உள்நாட்டினரும் உட்படுவர்.

கண்டுபிடிக்கப்பட்ட போலி சான்றிதழ்களுக்குரியோர் மீதான வழக்குகளை விசாரிக்க, அனைத்து போலி சான்றிதழ்களையும் ஜனரல் இன்வெஸ்டிகேசன் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எஞ்சினியரிங் கவுன்ஸில் தலைவர் டாக்டர். காஸி அல் அப்பாஸ் கூறியுள்ளார்.

"சமர்ப்பிக்கப்படும் பொறியியல் சான்றிதழ்களைச் சோதிக்கத் தனி பிரிவிடம் ஒப்படைக்கப்படும். ஒரு சான்றிதழைப் பரிசோதிக்க 500 சவூதி ரியால்கள் செலவாகும். சான்றிதழ் குறித்த முழு விவரம் கிடைக்க இரண்டு வாரங்கள் முதல் 3 மாதங்கள் வரை ஆகலாம்" என அவர் மேலும் கூறினார்.

சவூதியில் 30,000 போலி பொறியியலாளர்கள் உள்ளனர். இவர்களில் 25 சதவீதம் நபர்கள், வேறு விசாக்களில் வந்து பின்னர் தொழில் மாற்றம் செய்தோராவர். சிலர் குடும்ப விசா எடுப்பதற்காக விசா கேட்டகரியை மாற்றியவர்களாவர் என்றும் அவர் கூறினார்.
Disqus Comments