இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஜீத்திர சேனாநாயக்க சந்தேகத்திற்குரிய பந்து வீச்சில் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டியினையடுத்து போட்டி நடுவர்கள் மற்றும் மத்தியஸ்தர் ஆகியோர் முறையிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) எதிர்வரும் 21 நாட் களுக்குள் ஐ.சி.சி.யின் சோத னைகளுக்கு சமுகமளிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனிடையே, இந்த விடயம் தமக்கு அதிர்ச்சி அளித்துள்ளதாகவும் எனினும் இன்று நடைபெறவுள்ள 5 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இருந்து அவர் விளையாடுவார் எனவும் இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது