Tuesday, June 3, 2014

கிண்ணியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

கிண்ணியா -பைசல் நகர் சின்னத்தோட்டம் பாரதிபுரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
 
அச்சடலம் காலை 10 மணியளவில் மீட்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
 
பாரதிபுரத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான குகதாஸ் பிரியதரன் (வயது 28) என்பவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார்.
 
குடும்பத் தகராறு காரணமாக இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணையின் போது தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
 
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்
Disqus Comments