Tuesday, June 3, 2014

கதிரவெளியில் இடம்பெற்ற விபத்தில் 7 வயது பாடசாலை மாணவி மரணம்


மட்டக்களப்பு கதிரவெளியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் 7 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர். 

புத்தள பிரதேசத்தில்; இருந்து வெலிஓயா திருகோணமலை நோக்கி; இராணுவ உயர் அதிகாரிகள் பயணம் செய்த வான் பாடசாலை விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த மாணவியை மோதியதினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.

கதிரவெளி கணிஸ்ட வித்தியாலயத்தில் 3ஆம் ஆண்டில் கல்வி பயிலும் ம.பொபித்தா வயது(7) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டள்ளது.இது தொடர்பான விசாரணைகளை வாகரை பொலிசார் மேற்கொண்டு வருவதாக மேலும் தெரிவித்தனர்.
Disqus Comments