Monday, June 16, 2014

80 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதி: தமிழ் மொழிப் பாடசாலைகள் திறக்கப்பட வில்லை(படங்கள் இணைப்பு)

பேருவளையில் இன்று தமிழ்மொழி பாடசாலைகள் திறக்கப்படவில்லை. அத்துடன் தற்போதும் அங்கு பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகினறது. அத்துடன் பேருவளையில் ஒரு ஜனாஸா வீடு உள்ளதாகவும் அங்கு செல்வதற்கு மக்கள் அஞ்சிய நிலையில் வீட்டுக்குள் முடங்கியிருப்பதாகவும்
பேருவளையில் உள்ள ஆசிரியை ஒருவர் சிலோன் முஸ்லிம் இணையத்தளத்துக்கு தெரிவித்தார்.


நேற்று மாலை பேருவளை மற்றும் அளுத்கம பிரதேசத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் 80 பேர் காயமடைந்த நிலையில் களுத்துறை, பேருவளை, தர்காநகர் மற்றும் அளுத்கம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 7 பேர் உட்பட 36 பேர் களுத்துறை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பேருவளை வைத்தியசாலையில் பொலிஸ் அதிகாரி உள்ளடங்கலாக 7 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தர்காநகர்வைத்தியசாலையில் இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படை உறுப்பினர்கள் உள்ளிட்ட 10 பேர் அளுத்கம கிராமிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 8 பேர் களுத்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதில் இருவர் சிகிச்சையின் பின் வெளியேறியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.







Disqus Comments