Sunday, October 19, 2014

ரெட்பானா செய்திகள் என்றால் என்ன? ஏன்? எதற்கு? வாருங்கள் அறிந்து கொள்வோம்.

நீங்கள் நாளாந்தம் இணையத்தில் குறிப்பாக முகநூலில் உலா வருபராக இருந்தால் எப்படியும் ரெட்பானா செய்திகள் என்று என்றாவது படித்திருக்கக் கூடும். அந்த வகையில் ரெட்பானா செய்திகள் என்றால் என்ன என்று அறிந்து கொள்வதற்கு முன்னால் ரெட்பானா (REDBANA)  என்றால் என்ன?  என்று அறிந்து கொள்வது அவசியம் என்று கருதுகின்றோம்.

1980களில் செயற்பட்ட நோர்வே நாட்டின் அரச சார்பட்ட நிறுவனத்தின் (NGO) மூலம் ஸ்தாபிக்கப்பட்ட விவாசய குடியேற்றத்திட்டன் பெயா் தான் ரெட்பானா. புத்தளம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இந்த குடியேற்றத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் புத்தளம் மாவட்டத்தில் தற்போது மூன்று ரெட்பானாக்களை காணக் கூடியதாக இருக்கின்றது.

1 புத்தளம்மதுரங்குளிவிருதோடைரெட்பானா (கஜுவத்தை)
2)   கல்பிட்டிபள்ளிவாசல் துறைவெல்லங்கரைரெட்பானா
3)   புத்தளம்கரைத்தீவு6ம் கட்டை அம்பளம்ரெட்பானா.



எமது ரெட்பானா முதலாவதாக குறிப்பிடப்படும் புத்தளம்மதுரங்குளிவிருதோடைரெட்பானா (கஜுவத்தை) 1982ம் ஆண்டு விவசாய குடியேற்றத்திட்டத்தின் பெயராகும். இது ஒரு மரமுந்திரிகை விவசாயக் குடியேற்றத்திட்டமாக காணப்பட்டமையின் காரணமாக ஆரம்பத்தில் ரெட்பானா என்று அழைக்கப்படுவதை விட கஜுவத்தை என்றே அழைக்கப்பட்டு வந்தது. மரமுந்திரிகைக்கு சிங்கள மொழியில் கஜு என்றும் தோட்டத்துக்கு வத்தை என்றும் சொல்லப்படும். அந்த இரண்டு சொற்களை ஒன்றினைத்து கஜுவத்தை அதாவது முந்திரித்தோட்டாம் என்றே கருத்தில் அமைந்த சொற்பிரயோகமே எமது கிராமத்தின் ஆரம்பப் பெயராக இருந்து வந்தது. நாளடைவில் மரமுந்திரிகை மரங்கள் அழிவடைந்து போக கஜுவத்தை என்ற பெயா் வரலாற்று பெயராக மாற்றம் பெற்று ரெட்பானா என்ற பெயா் நிலைத்து இன்றும் அதே பெயராலேயே அழைக்கப்பட்டு வருகின்றது. 

ரெட்பானாவில் வசிப்பவா்கள் யார்?
ரெட்பானா 212 ஏக்கா்களை மட்டும் கொண்ட ஒரு குக்கிராமம். 1982ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த விவசாயக் குடியேற்ற திட்டத்தில் 601 கிராம சேவகா் பிரிவு விருதோடையைச் சோ்ந்தவா்கள் 60%மாகவும் 601/A கிராம  சேவகா் பிரிவு புழுதிவயலைச் சோ்ந்தவா்கள் 25%மாகவும் காணப்படுகின்றனா். அத்தோடு பெரும்பான்மை இனத்தைச்சோ்ந்த கத்தோலிக்க கிஸ்தவா்கள் 15%மாகவும் காணப்படுகின்றனா். 

இப்படிப்பட்ட ஒரு குக்கிராமத்தின் செய்திகள், நிகழ்வுகள் உட்பட இன்னோரன்ன பல விடயங்களை உலகலாவிய தமிழ் பேசும் மக்களுடன், (குறிப்பாக வேலை நிமித்தம் தமது தாய் நாட்டை விட்டுச் சென்று வாழும் எமது சொந்தங்களுடன்)  பகிர்ந்து கொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்டது தான் ரெட்பானா செய்திகள். 

ஆரம்பத்தில் ரெட்பானா என்று மட்டும் ஆரம்பிக்கப்பட்டு பின்னா் அதனையும் தாண்டி எமது தாய்க்கிராமங்களான விருதோடை, புழுதிவயல் ஆகிய கிராமங்களில் செய்திகள், அயல் கிராமங்களான கடையாமோட்டை, கணமூலை, சமீரகம, பொருக்கு வட்டான், கொத்தான் தீவு என்று பரவி பின்னர் புத்தளம், உள்நாடு, வெளிநாடுகளில் இடம்பெறும் தகவல்களை எம்மால் இயன்றவரை மக்களுக்கு கொண்டு போய் சோ்க்கும் பணியில் எமது தளம் ஈடுபட்டுள்ளது. 

மனிதன் என்ற வகையில் நாமும் தவறுகளுக்கும், தப்புக்களும் உட்பட்டவா்கள் தான். தப்புக்கள், தவறுகள் ஏற்படுகின்றபோது அதனை நல்லமுறையில் சுட்டிக் காட்டி அதனை திருத்திக் கொள்ள உதவும் படி நாம் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்.

இப்படிக்கு
நிர்வாகம்.




Disqus Comments