Friday, October 31, 2014

புத்தளம் - மன்னார் வீதி எழுவக்குளம் பகுதிக்கு பூட்டு

புத்தளம் - மன்னார் பிரதான வீதி எழுவக்குளம் பகுதியில் மூடப்பட்டுள்ளதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

கலாஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் வீதி மூடப்பட்டுள்ளது.

வில்பத்து சரணாலயத்திற்கு இடையில் உள்ள இந்த வீதி எழுவக்குளம் பகுதியில் கலாஓயாவை கடந்து செல்கிறது.

கலாஓயாவின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் வீதி நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் புத்தளத்தில் இருந்து எழுவக்குளம் செல்லும் வீதியை பயன்படுத்த வேண்டாம் என வாகன சாரதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Disqus Comments