கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க சுதந்திர ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10000 ரூபா சம்பள உயர்வு, வைத்திய காப்புறுதி, சேவை கடன்தொகை வழங்கல், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரியை அகற்றல், ஊழியர்களுக்கு ஓய்வு நேரம் வழங்கல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கட்டுநாயக்க விமான நிலைய சுதந்திர ஊழியர் சங்கம் இன்று காலை 9 மணியளவில் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்தது.
வேலை நிறுத்தத்தின் பின்னர் விமான சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டதுடன் மின்சாரமும் தடைபட்டது.
இந்நிலையில் தற்போது வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர ஊழியர் சங்கமானது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தொழிற்சங்கம் என்பது குறிப்பிடத்தக்கது