Thursday, November 6, 2014

சரத் பொன்சேகா மருத்துவத்திற்காக வெளிநாடு செல்ல அனுமதி

சரத் பொன்சேகா வெளிநாடு செல்ல அனுமதி  ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, தேர்தல் காலத்தில் அவரது செயலாளராக இருந்த முன்னாள் கெப்டன் சேனக்க ஹரிப்பிரிய டி சில்வா ஆகியோர் மருத்துவ சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.  இன்று முதல் ஒரு மாதகாலம் செல்லுபடியாகும் வகையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  

 அனுமதியின்றி இராணுவ சிப்பாய்களை பணியில் ஈடுபடுத்தியமை மற்றும் அரசாங்கம் மீதான நம்பிக்கையை வீழ்ச்சியுற செய்வதற்காக செயற்பட்டமை தொடர்பில் சரத் பொன்சேக்கா உள்ளிட்ட இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.  மருத்துவ சிகிச்சைகளுக்காக சிங்கப்பூர் செல்வதற்கு அனுமதியளிக்குமாறு சரத் பொன்சேகா மற்றும் சேனக்க ஹரிப்பிரிய டி சில்வா ஆகியோர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Disqus Comments