Thursday, November 6, 2014

3வது தடவையாகவும் நான் போட்டியிட முடியுமா? நீதி மன்றத்திடம் ஜனாதிபதி

மூன்­றா­வது தட­வை­யாக ஜனா­தி­பதித் தேர்­தலில் தான் போட்­டி­யிட முடி­யுமா? என்­பது தொடர்பில் ஆலோ­சனை வழங்­கு­மாறு ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜ­பக் ஷ உயர் நீதி­மன்­றத்தைக் கோரி­யுள்ளார்.


ஜனா­தி­ப­தியின் இந்த ஆலோ­சனை மனு­தொ­டர்பில் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ர­சர்கள் 7 பேரைக் கொண்ட குழு நேற்று ஆராய்ந்­துள்­ளது. இந்த விவ­காரம் தொடர்பில் சம்­பந்­தப்­பட்ட தரப்­பினர் எழுத்­து­மூ­ல­மான சமர்ப்­ப­ணங்­களை நாளை வெள்ளிக்­ கிழமை 3 மணிக்கு முன்னர் சமர்ப்­பிக்க வேண்­டு­மென்று நீதி­ய­ர­சர்கள் குழாம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

மூன்­றா­வது தட­வை­யாக ஜனா­தி­பதித் தேர்­தலில் தான் ­போட்­டி­யி­ட­லாமா என்­பது குறித்து எதிர்­வரும் 10 ஆம் திகதி திங்­கட்­கி­ழ­மைக்கு முன்னர் தனக்கு அறி­வு­றுத்­து­மாறு ஜனா­தி­பதி உயர்நீதி­மன்­றத்­திடம் கோரியி­ருக்­கின்றார். இத­னை­ய­டுத்தே, இந்த விவ­காரம் தொடர்பில் 7 நீதி­ய­ர­சர்கள் கொண்ட குழு ஆராய்ந்­துள்­ளது.

1978 ஆம் ஆண்டு அர­சியல் யாப்பில் செய்­யப்­பட்ட 18 ஆவது திருத்தச் சட்­டத்தின் மூலம் தனக்கு மூன்­றா­வது தடவை ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­வதில் சிக்கல் இருக்­கின்­றதா என்­பது தொடர்பில் ஆலோ­சனை வழங்­கு­மாறு ஜனா­தி­பதி உயர் நீதி­மன்­றத்தை கோரி­யுள்ளார்.

இத­னை­ய­டுத்து இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்கத் தலை­வ­ருக்கு உயர் நீதி­மன்ற பதி­வாளர் நேற்று கடி­த­மொன்­றினை அனுப்­பி­வைத்­துள்ளார். இந்தக் கடி­தத்தி்ல் ஜனா­தி­ப­தியின் கோரிக்கை தொடர்பில் நாளை வெள்­ளிக்­கி­ழமை 3 மணிக்கு முன்னர் சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் சமர்ப்­ப­ணங்­களை அனுப்­பி­வைக்­கு­மாறு பதி­வாளர் கோரி­யுள்ளார்.

பிர­தம நீதி­ய­ர­சரின் ஆலோ­ச­னைக்கு அமை­யவே உயர் நீதி­மன்ற பதிவாளர் இக்கடிதத்தினை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு அனுப்பிவைத்துள்ளார்.
ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்­கத்­தினால் 17 ஆவது திருத்தச் சட்டம் இல்­லாது ஒழிக்­கப்­பட்டு 18ஆவது திருத்தச் சட்டம் அமு­லுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. இதன் மூலம் ஜனா­தி­பதி தேர்­தலில் எத்­தனைத் தடவை வேண்­டு­மா­னாலும் ஒருவர் போட்­டி­யி­டலாம் என்ற நடை­முறை அமு­லுக்கு வந்­துள்­ளது.

ஆனாலும் இரண்­டா­வது பத­விக்­கா­லத்தில் இந்தத் திருத்­தினை ஜனா­தி­பதி மஹிந்­த­ரா­ஜ­பக்ஷ கொண்­டு­வந்­த­மை­யினால் மூன்­றா­வது தட­வை­யாக ஜனா­தி­பதி போட்­டி­யிட முடி­யாது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இதனையடுத்து மூன்றாவது தடவையும் தான் போட்டியிடலாமா என்பது தொடர்பில் ஆலோசனை வழங்குமாறு உயர் நீதிமன்றத்தை ஜனாதிபதி கோரியிருக்கின்றார்.
Disqus Comments